11 நாட்கள் விரதம்.. 250 கிலோமீட்டர்..திடீரென வெறிச்சோடிய 3 கிராமங்கள் - என்ன காரணம்?

x

ஊத்தங்கரை அருகே மூன்று கிராம மக்கள் விரதமிருந்து திருப்பதிக்கு நடைபயணம் மேற்கொண்டுள்ளதால் ஊரே வெறிச்சோடியுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம் படப்பள்ளி, பெருமாள் குப்பம் மற்றும் பட்டுக்கானூர் கிராமமக்கள் ஆண்டுக்கு ஒருமுறை 11 நாட்கள் விரதம் இருந்து நடைபயணமாக திருப்பதி சென்று ஏழுமலையான தரித்து வருகின்றனர். அந்த வகையில் மூன்று கிராம மக்களும் இன்று திருப்பதிக்கு நடைபயணம் மேற்கொண்டனர். அவர்கள் 7 நாட்களில் 250 கிலோமீட்டர் நடைபயணமாக சென்று திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவுள்ளனர். நடைபயணமாக சென்ற பக்தர்களுக்கு பாத பூஜை செய்தும் மோர் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கியும் பொதுமக்கள் வழங்கி வழி அனுப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்