தமிழ்நாட்டை உலுக்கிய சம்பவம்.. மேலும் எத்தனை சிறுமிகள் பாதிப்பு? சாட்டையை சுழற்றிய அதிகாரிகள்
கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், முதலமைச்சர் அமைத்த சிறப்பு புலானய்வு குழு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி உட்பட11 பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், காவல்துறை தலைவர் பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு ஒன்றும், பாதிக்கப்பட்ட மாணவிகள் அவர்கள் பெற்றோர்களை கலந்து வளர்ச்சிக்கும், பாதிக்கப்பட்டவர்களின் நலம் காத்திடவும் சமூக நலத்துறை செயலாளர் ஜெய் ஸ்ரீ முரளிதரன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைத்து முதலமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி இக்குழுவினர் கலெக்டர் அலுவலகத்தில் சம்பவம் குறித்தும் இதுவரை என்னென்ன என்பது குறித்தும் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகின்றனர். அதன்பிறகு சம்பவம் நடந்த பகுதிகளை ஆய்வு செய்ய உள்ளனர். மேலும் இது போன்ற சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனரா?, கைது செய்யப்பட்ட சிவராமன் எங்கெங்கு என்சிசி முகாம் நடத்தியுள்ளார் என்பது தொடர்பாகவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,