தமிழகத்தை உலுக்கிய கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் அதிர்ச்சி திருப்பம் - விசாரணையில் பகீர்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலி என்சிசி முகாம் நடத்தி, மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவத்தில், மேலும் ஒரு அரசு பள்ளி என்.சி.சி. ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றில் போலி என்சிசி முகாம் நடத்தி, 8-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த போலி பயிற்சியாளர் சிவராமனை போலீசார் கைது செய்தனர். கைது நடவடிக்கைக்கு முன்பே விஷம் குடித்து த*கொலைக்கு முயன்ற சிவராமன், சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த 23-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த வழக்கில், இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒரு என்.சி.சி. பயிற்சி ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர். காவேரிப்பட்டினம் அரசு ஆண்கள் பள்ளியில் பணிபுரியும் கோபு என்பவர், சிவராமனுக்கு போலி என்.சி.சி. முகாம் நடத்த அனுமதி அளித்தது, அதற்கான சான்றிதழ்களை தயார் செய்து கொடுத்தது, மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரிந்தும் அதை மறைத்தது ஆகிய குற்றங்களுக்காக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்ப்பட்டார்.