அதிகாலையில் மனைவியோடு அலறிய அரசு ஊழியர்... திக் திக் சம்பவம்

x

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே, அரசு அலுவலர் மற்றும் அவரது மனைவியை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கந்திகுப்பம் அருகே ஜெ.ஜெ. நகர் பகுதியை சேர்ந்த சிலம்பரசன், மாவட்ட காசநோய் பிரிவில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இவர் அந்த பகுதியில் புதிதாக வீடு கட்டி குடியேறினார். சிலம்பரசன், தனது மனைவி தேவிப்பிரியா மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் இரவில் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலையில், வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த 3 முகமூடி கொள்ளையர்கள், சிலம்பரசன் மற்றும் அவரது மனைவியை கட்டிப்போட்டனர். பின்னர், பீரோவை திறந்து ஐந்தரை பவுன் தங்க நகைகள், வெள்ளிப்பொருட்கள் மற்றும் 1 லட்சத்து 6 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்தனர். இதுகுறித்து சிலம்பரசன் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்