"ரூ.5,000 கொடுத்தால் ரூ.15,000.." - கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் அருகே பகீர்

x

ரூ.5,000 கொடுத்தால் ரூ.15,000.." - கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் அருகே பகீர்

சென்னையில் பண இரட்டிப்பு மோசடியில் இருவரை போலீசார் கைது செய்தனர். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில், பண இரட்டிப்பு மோசடி தொடர்பாக இருவரிடம் போலீசார் சோதனை செய்தனர். இதில், 50 ஆயிரம் ரூபாய் மற்றும் 20 பண்டல்கள் கொண்ட கள்ள பேப்பர் நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. பணக்கட்டுகளில் முன்புறமும், பின்புறமும் அசல் 500 ரூபாய் நோட்டுகளை வைத்து இடையே பேப்பர்களை வைத்து மோசடியில் ஈடுபட்ட திருப்பூரை சேர்ந்த ஆஷிக், புதுக்கோட்டையை சேர்ந்த சண்முகவேலை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். 500 ரூபாய் பணக்கட்டில் சில நோட்டுகள் மட்டுமே உண்மையானது என்றும், மற்றவை வெறும் வெள்ளைத் தாள்கள் என்பதும் தெரியவந்தது. பணக்கட்டில் மேல்புறமும் கீழ்புறமும் உண்மையான 500 ரூபாய் பணத்தை வைத்து, 5 ஆயிரம் ரூபாய்க்கு 15 ஆயிரம் ரூபாய் தருவதாகக் கூறி, பணத்தை கைமாற்றி விடுவதற்கு இருவரும் காத்திருந்தபோது போலீசார் மடக்கிப் பிடித்தனர். சுமார் 7 லட்சம் ரூபாய் பணத்தில் 50 ஆயிரத்தை நல்ல பணமாக வைத்துக்கொண்டு, மீதமுள்ள 6 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தில், கள்ள நோட்டு பேப்பர்களை வைத்து மோசடியில் ஈடுபட இருந்ததும் தெரியவந்தது.


Next Story

மேலும் செய்திகள்