கோவிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி நிலம்.. அதிரடி காட்டிய அறநிலையத்துறை | Thanthitv
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மாவூத்து உதயகிரிநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்பிலான 388 ஏக்கர் விளை நிலங்களை மீட்ட அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் பெயரில் பட்டா பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். கோயிலின் பரம்பரை அறங்காவலர் காசிகிரி கோசாகியார் பெயரில் இருந்த இந்த நிலங்கள், அவரது சம்மதத்தின்பேரில், இந்து சமய அறநிலை துறையின் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து பேசிய வட்டாட்சியர் மாரிமுத்து, கோயில் பெயரில் பட்டா பெற்று, நிலங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் அறநிலையத்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் என்றார்.
Next Story