திருச்செந்தூர் கடலில் குதித்து உயிர் பிழைத்த பெண் - வீட்டிற்கு வந்ததும் பறிபோன உயிர்
கோவில்பட்டி, இலுப்பையூரணி கிராமத்தை சேர்ந்தவர் நிதீஷ் குமார். 20 வயதான இவர், மூளையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, கடந்த சில வருடங்களில் லட்ச ரூபாய் செலவு செய்து மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 26 ஆம் தேதி சிகிச்சை பலனின்றி நிதிஷ் குமார் உயிரிழந்தது அவரது குடும்பத்தாரை சோகத்தில் மூழ்கடித்துள்ளது. இதில், மகனை பறிகொடுத்த துயரத்தில் இருந்து மீள முடியாமல் ஜீவாவின் தாய் ராஜாத்தி துவண்டு போயிருக்கிறார். இந்நிலையில், யாரிடமும் சொல்லாமல் திருச்செந்தூர் விரைந்த ராஜாத்தி, அங்கு கடலில் குதித்து த*கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ராஜாத்தியை மீட்டு அவரின் கணவரிடம் ஒப்படைத்த நிலையில், வீடு திரும்பிய ராஜாத்தி, தன் வீட்டு அறையில் தூக்கிட்டு த*கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பெண்ணின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.....