சென்னை அருகே பரபரப்பு.. தண்ணீர் தட்டுப்பாடுக்கு திட்டம்.. பிளானை கேட்டு போராட்டத்தில் குதித்த மக்கள்
செங்கல்பட்டு மாவட்டம், கோவளம் ஊராட்சியின் தண்ணீர் தட்டுப்பாட்டை குறைக்க மத்திய அரசு திட்டமான ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் சுமார் 14 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக கேளம்பாக்கம், வண்ணான் ஏரியில் ஆழ்துளை கிணறு அமைக்க மண் பரிசோதனை செய்யப்பட்டது. இதனையறிந்த கேளம்பாக்கம் ஊராட்சி தலைவர் ராணி எல்லப்பன், ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்களுடன் போராட்டத்தில் இறங்கினார். ஏற்கனவே சுமார் 8 இடத்தில் மோட்டார் பம்பின் மூலம் தண்ணீர் எடுப்பதாகவும், மேற்கொண்டு ஆழ்துளை கிணறு அமைத்தால், தங்கள் பகுதி மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மண் பரிசோதனை மட்டுமே நடத்தப்படும் என உறுதி அளித்ததின் பேரில், போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
Next Story