பத்து வயது சிறுமி உயிரிழந்த விவகாரம்! மிருகமாய் மாறிய தாய்! விசாரணையில் திடீர் ட்விஸ்

x

பத்து வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, சிறுமியின் தாயை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி - சந்தான லட்சுமி தம்பதிக்கு 10 வயது மகள் அனுஸ்ரீ மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்தநிலையில் கடந்த மே மாதம் 17 ம் தேதி அனுஸ்ரீ கட்டிலிலில் இருந்து கீழே விழுந்துவிட்டதாக கூறி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தநிலையில், சிறுமியின் உடலில் சந்தேகப்படும்படியான காயங்கள் இருந்ததால் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், 2 மாதங்களுக்கு பிறகு வந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமியின் உடலில் 30 இடங்களில் காயம் இருந்ததால் அவர் கடுமையாக தாக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் அவருடைய தாய் சந்தான லட்சுமியை பிடித்து விசாரித்தனர். குழந்தை சரியாக படிக்காததால் அவரை கடுமையாக அடித்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, தாய் சந்தானலட்சுமி மீது கொலை குற்றம் ஆகாத மரணத்தை விளைவித்தல் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்