மனித செய்கைகளை கொண்ட முதல் AI ரோபோ - தந்தி டிவி மைக்கை பிடித்து பேட்டி கொடுத்து அசத்தல்

x

இந்தியாவில் மனித செய்கைகளை கொண்ட முதல் ஏஐ ரோபோவை

கோவை கல்லூரி மாணவர்கள் கண்டுபிடித்து அசத்தி உள்ளனர்.

கோவை அரசூரில் உள்ள பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ஒன்றில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து முழுமையாக செயல்படக்கூடிய ஏஐ ரோபோவை கண்டுபிடித்து உள்ளனர். 6 அடி உயரத்தில் 40 கிலோ எடை கொண்ட இந்த ரோபோ மனிதர்களைப் போலவே 26 வெவ்வேறு விதமான சைகைகள் மற்றும் அசைவுகளை செய்கிறது. மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மனிதர்களுடன் உரையாடும் திறன் கொண்டும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோட்டுக்கு உற்று நோக்குதல், யோசித்துப் பேசுதல், சைகைகளை புரிந்து தகவல்களை கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான செயல்பாடுகளைப் கொண்டிருப்பதாக ரோபோவை தயாரித்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்