இன்ஸ்பெக்டராகும் ஆசையில் இருந்த கோவை இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி
இன்ஸ்பெக்டராகும் ஆசையில் இருந்த கோவை இளைஞருக்கு நடந்த அதிர்ச்சி
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே இன்ஸ்பெக்டர் பணி பெற்று தருவதாக கூறி 25 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சிறப்பு எஸ்.ஐ உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தப்பட்டைகிழவன் பகுதியைச் சேர்ந்த இளைஞர் பிரசாந்த் அளித்த புகார் குறித்து விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். நல்லூர் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முரளிதரன், அவருக்கு உடந்தையாக இருந்த இளைஞரின் உறவினர் ஜெயராஜ் ஆகியோரை கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தொடர்புடைய கிருஷ்ணராஜை போலீசார் தேடி வருகின்றனர். இன்ஸ்பெக்டர் பணி வாங்கி தருவதாகக் கூறி இளைஞர் பிரசாந்திடம் வாங்கிய 25 லட்சம் ரூபாய் பணத்தை, சிறப்பு எஸ்.ஐ முரளிதரன், ஜெயராஜ், கிருஷ்ணராஜ் ஆகிய 3 பேரும் பங்கிட்டு கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.