பெண் தூய்மை பணியாளரை காலால் உதைத்து, இரும்பால் அடித்து கொடூரமாக தாக்கிய நபர் - அதிர்ச்சி வீடியோ

x

பூச்சியூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் வசித்து வரும் 35 வயது மதிக்கத்தக்க சங்கர் வசித்து வருகிறார்... கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி பிரிந்து சென்று விட்டார்... வீட்டில் தனியே வசித்து வரும் சங்கர் அடுக்குமாடி குடியிருப்பில் பணி புரியும் காவலாளி முதல் தூய்மை பணியாளர் வரை அனைவரிடமும் தகராறு செய்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது... குப்பையை எடுத்துச் செல்லாமல் சென்று விட்டதாகக் கூறி தூய்மைப் பணியாளரைக் கடுமையாக தாக்கினார்... மேலும்,

வாகனத்தில் வரும் பொழுது கதவை திறக்கவில்லை எனக்கூறி காவலாளியையும் தாக்கியுள்ளார்... இதுகுறித்து போலீசில் புகாரளித்த போதும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுபோன்று அங்கு குடியிருக்கும் அனைத்து குடும்பத்தினரிடமும் தகராறு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது... மனைவியைப் பிரிந்து தனியே வாழும் சங்கர் குடியிருப்பு வாசிகளிடம் சென்று பெண் இருந்தால் திருமணம் செய்து வைக்குமாறு கூறி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது... காவல்துறை உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த அடுக்குமாடி குடியிருப்பு வாசிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்