கோவை மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

x

கோவை மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.

வரும் 31-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. கோவை மாநகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு, ஏதேனும் பரிசு பொருட்கள் கொடுக்கப்படுகின்றனவா? அல்லது இவர்கள் வேறு யாருக்காவது பரிசு பொருட்களோ, பணமோ கொடுக்கின்றனரா? என சோதனை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோவை மாநகராட்சி அலுவலகத்திற்கு, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஒருவர் வந்த சில நிமிடங்களிலேயே சோதனையை முடித்துக்கொண்டு, வேக வேகமாக காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்