Lower Berth-ல் தூங்கிய குழந்தை.. மேலே விழுந்த Upper Berth -கோரத்துக்கு பின் அவன் சொன்ன வார்த்தை

x

ரயிலில் லோ பெர்த்தில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையின் தலையில் மேல் இருக்கை சரிந்து விழுந்து பலத்த காயமடைந்த நிலையில், மருத்துவ செலவை ரயில்வே துறை ஏற்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை துடியலூர் அருகே அண்ணா டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த மேத்யூஸ்-புவிதா தம்பதி கடந்த 16ம் தேதி இரவு நாகர்கோவிலில் இருந்து கோவை சென்ற ரயிலில் தங்கள் 4 வயது மகன் ஜெயின்சன் மோசசுடன் ஏறியுள்ளனர்... அப்போது கீழ் இருக்கையில் ஜெயின்சன் மோசஸ் தூங்கிக் கொண்டிருந்த போது ரயில் பெட்டியின் மேல் இருக்கை சரிந்து விழுந்து தலையில் கண்ணருகே காயம் ஏற்பட்டது. உடனடியாக குழந்தை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 6 தையல்கள் போடப்பட்டன. இது தொடர்பாக ரயில்வே துறை எந்தவிதமான விளக்கமும் கொடுக்கவில்லை எனவும், முதலுதவி அளிக்க எந்த உதவியும் செய்யவில்லை என்றும் சிறுவனின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்... சேலம் கோட்டத்திற்கு புகார் அளித்திருப்பதாகவும் இதுவரை எந்தவிதமான பதிலும் தரவில்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்... தற்போது ஜெயின்சன் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தன்னுடைய மகனின் மருத்துவ செலவை ரயில்வே துறை ஏற்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். காயமடைந்த குழந்தை ஜெயின்சன், "காயம் வலிக்கிறது" என நம்மிடம் மழலைக் குரலில் தெரிவித்தது கலங்க வைத்து விட்டது...


Next Story

மேலும் செய்திகள்