ஒருபக்கம் முண்டியடித்து செல்லும் மக்கள் - மறுபக்கம் காலியாக சென்ற ரயில்
தீபாவளியை முன்னிட்டு, இன்று முதல் கோவையில் இருந்து திண்டுக்கல்லிற்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மெமு எக்ஸ்பிரஸ் என்ற சிறப்பு ரயில் கோவையிலிருந்து காலை 9.35க்கு புறப்பட்டு பொள்ளாச்சி, பழனி வழியாக 1.10க்கு திண்டுக்கல் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் மதியம் 2 மணிக்கு தின்டுக்கல்லில் இருந்து புறப்படுகிறது. இன்று முதல் நவம்பர் 6 வரை இயக்கப்பட உள்ளது. இது குறித்து பலருக்கும் தெரியாததால், முதல் நாளான இன்று கூட்டமின்றி காணப்பட்டது.
Next Story