கஞ்சா கும்பலை பிடிக்க சென்ற போலீஸ்..பிடித்த மறுநொடியே மாறிய காக்கி மனசு - விசாரணையில் திடுக் தகவல்
கஞ்சா கும்பலை பிடிக்க சென்ற போலீஸ்..பிடித்த மறுநொடியே மாறிய காக்கி மனசு - விசாரணையில் திடுக் தகவல்
கோவையில் கஞ்சா வியாபாரிகளுக்கு உதவியததற்காக இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கஞ்சா வியாபாரிகள் கணேசன் மற்றும் முத்துக்குமார் மூலம் கோவைக்கு கஞ்சா கடத்தி கொண்டு வரும் கும்பலை பிடிக்க போலீசார் திட்டமிட்டிந்த நிலையில், அந்த கும்பல் போலீசாரிடம் பிடிபடாமல் தப்பியது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, பணியில் இருந்த காவலர்களிடம் இருந்து செல்போனை வாங்கி, கஞ்சா கடத்தி வந்த கும்பலுக்கு கணேசன் மற்றும் முத்துக்குமார் தகவல் சொல்லி இருப்பது தெரிய வந்தது. போலீஸ் பிடியில் இருந்த கஞ்சா வியாபாரிகளிடம் 2 ஆயிரம் ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு, பணியில் இருந்த போலீசாரே செல்போனை கொடுத்து உதவியதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர்கள் ரவி சேகர் மற்றும் மாயசுதாகர் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து துணை ஆணையர் சரவணக்குமார் உத்திரவிட்டுள்ளார்.