பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு மறக்க முடியாத தண்டனை கொடுத்த கோர்ட்

x

கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 2020-ஆம் ஆண்டு துடியலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், திருமணத்திற்கு வரன் தேடியபோது அறிமுகமான ஈரோட்டைச் சேர்ந்த சிபிராஜ் என்பவர், குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாக குறிப்பிட்டிருந்தார். முதலில் திருமணம் செய்து கொள்வதாக கூறிய சிபிராஜ், திருமணத்திற்கு மறுப்பு தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த கோவை மகளிர் நீதிமன்றம நீதிபதி ஆர்.நந்தினி தேவி, குற்றம்சாட்டப்பட்ட சிபிராஜுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்