நண்பருடன் உல்லாசமாக இருந்த தாய்.. தலையில் கல்லைப் போட்டுக் கொன்ற மகன்.. கோவையில் பரபரப்பு சம்பவம்

x

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த நிலையில், தனது இரு மகன்களுடன் கோவையில் தங்கி, பேக்கரியில் பணியாற்றி வந்தார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சவுந்தரபாண்டியன் என்ற நபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது, அந்தப் பெண்ணின் மகனுக்கு தெரியவர, தாயை கண்டித்துள்ளார். எனினும், தகாத உறவை விடாததால், ஆத்திரமடைந்த மகன், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாயின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டுக் கொலை செய்துள்ளார். தகவலின் பேரில் வந்த போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதுடன், மகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்