7 வயது சிறுமியை சிதைத்த கொடூரன் - அடி புரட்டி எடுத்த மக்கள்

x

கோவையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், பேரூர் காவல்நிலையத்தை பொதுமக்கள் நள்ளிரவில் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த செல்வகுமார் என்பவரை பொதுமக்கள் பிடித்து தாக்கி, காவல்நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது காவல்நிலையத்தில் காவலர்கள் யாரும் இல்லையெனவும், மேற்கொண்டு பேரூர் மகளிர் காவல்நிலையம் சென்று புகாரளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நள்ளிரவில் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்