கிளி ரூபத்தில் வந்த மாசாணியம்மன்...பக்தி பரவசத்தில் பக்தர்கள் - கோவையில் நெகிழ்ச்சி

x

கோவை மாவட்டம் சூலூரில் பிரசித்திபெற்ற மாசாணியம்மன் கோயிலில் நடைபெற்ற ஆடி மாத பூஜையில், கிளி ஒன்று நகராமல் அம்மன் தலையிலேயே அமர்ந்ததை கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர். சூலூர் அருகே இருகூர் கிராமத்தில் அமைந்துள்ள மாசாணி அம்மன் கோயிலில், ஆடி மாதத்தில் அம்மன் மீது பச்சைக்கிளி அமர்வது வழக்கம். இந்த ஆண்டும், மாசாணியம்மன் தலையிலும், வெளியே அமைக்கப்பட்டுள்ள சிவன் பார்வதி ஊஞ்சலிலும் கிளி அமர்ந்து தரிசனம் தந்துள்ளது. பூஜையில் பம்பை இசை முழங்கினாலும், கற்பூர ஆரத்தி காட்டினாலும், அம்மன் தலையிலே அமர்ந்து நகராமல் நின்றது. அந்த கிளியை திரளான பக்தர்கள் பக்திப்பரவசத்துடன் வழிபட்டுச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்