உணவு, டீ, செலவு மட்டும் 27 லட்சம் - வெளியான அதிர்ச்சி தகவல்

x

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் பற்றிய தீயை அணைக்க, 11 நாட்களில் சுமார் 77 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாக மாநகராட்சி ஒப்புதல் தீர்மான நகலில் குறிப்பிடப்பட்டுள்ளது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது

கோவை மாநகராட்சியில் சாதாரண மாமன்ற கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. கோவை மேயர் கல்பனா ஆனந்தகுமார் ராஜினாமா செய்துள்ள நிலையில், துணை மேயர் வெற்றி செல்வன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 333 தீரமானங்கள் கொண்டுவரபட்டன. அதில் கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை கட்டுகடங்காமல் தீப்பற்றி பரவியதாகவும், அந்த தீயை அணைப்பதற்கான செலவு கணக்குகள் குறித்து மன்றத்தின் பார்வைக்காக ஒப்புதல் தீர்மானமாக கொண்டுவரப்பட்டது. அதில் மொத்தம் செலவு 76 லட்சத்து 70 ஆயிரத்து 318 காட்டப்பட்டுள்ளது. அதில் உணவு டீ , காபி மற்றும் குளிர்பானங்கள், பழங்களுகள் வாங்கியதற்காக மட்டும் 27 லட்சத்து 51 ஆயிரத்து 678 ரூபாய் கணக்கு காட்டப்பட்டுள்ளது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்