உடலுக்கு பொருந்தாத வேறு வகை ரத்தத்தால் உயிரிழந்த பெண் - கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு
கோவை மின்வாரிய உதவி பொறியாளராக பணிபுரியும் சாய்பிரேமன் என்பவர், கோவை நுகர்வோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், தனது மனைவி ராஜலட்சுமி, விபத்தில் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அங்கு மருத்துவர்கள் ரத்தம் ஏற்றியதாகவும் தெரிவித்தார். இதையடுத்து வாந்தி, வயிற்று வலி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டு, பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார். தனது மனைவிக்கு உடலுக்கு பொருந்தாத வேறு வகை ரத்தம் ஏற்றியதன் காரணமாக நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாகவும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். வழக்கை விசாரித்த நீதிபதி தங்கவேலு, மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர்கள் 3 பேர் இணைந்து, சாய்பிரேமனுக்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.