கோவையில் போஸ்ட்மார்ட்டம் அறையில் இருந்து வந்து கொண்டே இருக்கும் ரத்தம் - அதிர்ந்து போன மக்கள்
நாள் ஒன்றுக்கு சராசரியாக 20 சடலங்கள், உடற்கூராய்வு செய்யப்படும் நிலையில் மாலையில் பணி முடிந்து மேடைகளை கழுவி விடும்போது வரும் தண்ணீர் என மருத்துவமனை தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனை தரப்பில், கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. ப்ளீச்சிங் பவுடரின் வெள்ளை நிறம் முழுவதும் ரத்த சிவப்பு நிறத்தில் மாறும் அளவிற்கு கழிவுநீர் வெளியேறியது. இது தவிர மருத்துவமனை வளாகத்தில் ஒரு சில இடங்களில் கழிவு நீர் வெளியேறும் சிக்கல் உள்ளது. மருத்துவமனை டீன் நிர்மலாவிடம் கேட்டபோது, பிரச்சனையை சரி செய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பேசியுள்ளதாக பதில் அளித்தார். விரைவில் இந்த பிரச்னையை சரி செய்ய வேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story