ஊரையே நடு நடுங்க வைத்த கொம்பன் - வைரலாகும் வீடியோ

x

கோவை அருகே, பட்டாசு வெடிச் சத்தங்களுக்கு அஞ்சாமல் ஊருக்குள் முன்னேறிச் சென்ற யானையின் வீடியோ வைரலாகியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரமான சாடிவயல், காருண்யா, நல்லூர்வயல் உள்ளிட்ட பகுதிகளில் உணவு தேடி ஒற்றை யானை ஒன்று சுற்றித் திரிந்தது. பட்டாசு வெடித்து யானையை காட்டுக்குள் விரட்ட வனத்துறையினரும், பொதுமக்களும் முயன்றனர். ஆனால், வெடிச் சத்தங்களுக்கு அஞ்சாமல், யானை ஊருக்குள் முன்னேறிச் சென்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பின்னர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, அந்த யானை காட்டுக்குள் விரட்டப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்