கோவையை உலுக்கிய வழக்கறிஞர் கொலை... ``12 மணி நேரத்தில்...'' திடுக்கிடும் பின்னணி...

x

கோவை அருகே வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டதற்கு தனிப்பட்ட பணம், கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தான் காரணம் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.

கோவை செட்டிபாளையம் அருகே வழக்கறிஞர் உதயகுமார் வெட்டிகொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் செய்தியாளர்களை சந்தித்தார். வழக்கறிஞர் உதயக்குமாரிடம் அய்யனார் என்பவர் ரூபாய் 30 லட்சம் கடனாக கொடுத்ததாகவும், அதனை திருப்பி தர மறுத்ததால் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் உதயக்குமார் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது இருவருக்கும் இடையேயான தனிப்பட்ட பிரச்சினைதான் என கூறிய அவர் கொலையாளிகளை 12 மணி நேரத்தில் கைது செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்