காட்டுக்குள் சடலமாக கிடந்த நபர்.. உடலில் தெரிந்த மாற்றம் - வெளியான முக்கிய தகவல்

x

சூலூர் அடுத்த சின்னவதம்பச்சேரி பகுதியை சேர்ந்தவர் பரமசிவன். கோழிப் பண்ணையில் வேலை பார்த்து வந்த இவர், ஓடக்கல் பாளையம் கிராமத்துக்கு அருகேயுள்ள காட்டு பகுதியில் தலையில் காயங்களுடன் சடலமாக கிடந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. உடல் கண்டெடுக்கப்பட்ட காட்டுப் பகுதியில், தன் நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கடி மது அருந்தி வந்துவதை பரமசிவன் வாடிக்கையாக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இளைஞரின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போலீசார், நண்பர்களுடன் மது அருந்தும் போது ஏற்கட்ட தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்