கோவையில் இறந்த தங்கையின் நினைவாக அண்ணன் செய்த நெகிழ்ச்சி செயல்
கோவை மாவட்டம் சூலூரை சேர்ந்த முருகேசனின் தங்கை மணிமேகலை, கணபதி பாளையம் அரசுப்பள்ளியில் படித்து வந்துள்ளார். சிறந்த மாணவியாக விளங்கிய மணிமேகலை, எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளார். மணிமேகலை படித்த பள்ளிக்கு ஏதாவது செய்ய விரும்பிய முருகேசன், தங்கை படித்த அரசுப் பள்ளிக்கு கலையரங்கம் கட்டிக் கொடுத்துள்ளார். இதுதவிர ஒன்றரை லட்சம் ரூபாய் நிதி உதவியும் வழங்கி உள்ளார். இதுகுறித்து பேசிய அவர் மற்ற பள்ளிகளுக்கும் உதவி செய்ய உள்ளதாகவும், மற்றவர்களும் தாங்கள் படித்த பள்ளிக்கு உதவி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.
Next Story