கோவை குண்டுவெடிப்பு சம்பவம்..! சமூக வலைதளங்களில் பறந்த பதிவு.. பாஜக நிர்வாகியை தட்டித்தூக்கிய போலீஸ்
கோவை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக, சமூக வலைதளங்களில் பதிவிட்ட பாஜக நிர்வாகியிடம் கோவை சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 1998 ஆண்டு கோவையில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக "கோவை மன்னிக்காது" என்ற ஹாஸ்டேக்கை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பாஜக மாநில தொழிற்பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார் மீது, கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜரான அவரிடம் போலீசார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதில் மதக்கலவரத்தை தூண்டும் நோக்கில் பதிவு செய்யவில்லை என அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story