ஆர்மியில் சேரும் கனவோடு கோவை வந்திறங்கிய இளைஞர்கள் பட்ட பாடு.. தீயாய் பரவும் அதிர்ச்சி காட்சி

x

ஆர்மியில் சேரும் கனவோடு கோவை வந்திறங்கிய இளைஞர்கள் பட்ட பாடு.. தீயாய் பரவும் அதிர்ச்சி காட்சி

கோவையில் ராணுவத்தில் சேர ஆர்வமுடன் வந்த

இளைஞர்கள் இரவில் சாலையோர பிளாட்பாரங்களில்

தங்கி சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்திய ராணுவத்தில் ராணுவ வீரர்கள், கிளார்க் உள்ளிட்ட பணிகளுக்கு ஆள் சேர்ப்பு முகாம் கோவை அவிநாசி சாலையில் உள்ள போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் இன்று துவங்குகிறது. மொத்தம் 174 ராணுவ வீரர்கள், 50 கிளார்க் பணியிடங்கள்

இதன் மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த முகாமில் தமிழ்நாடு மட்டுமன்றி தெலங்கானா, குஜராத், கோவை, புதுச்சேரி, லட்சத்தீவை சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர்.

உடற் தகுதி தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு வரும் 16 ம் தேதி வரை சான்றிதழ்

சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட உள்ளன. இந்நிலையில் ராணுவத்தில்

சேர ஆர்வமுடன் வந்த இளைஞர்கள் இரவில் தங்க

இடமின்றி காவலர் பயிற்சி மைதானம் எதிரே சாலை

ஓரத்தில் உள்ள பிளாட்பாரத்தில் தங்கி குளிர் மற்றும்

கொசுக்கடிக்கு ஆளாகி சிரமப்பட்டனர்.

உணவு, குடிநீர், கழிவறை போன்ற வசதிகள் இல்லாததால் தடுமாறிய அவர்கள் , ராணுவத்தில் சேர வேண்டும் என்ற தங்கள் லட்சியத்துடன் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்