ஆக்ரோஷமான கொள்ளிடம்... சிதம்பரம் அருகே தீவுகளான கிராமங்கள்... ஆட்சியர் சொன்ன முக்கிய தகவல்

x

சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளபெருக்கு காரணமாக திட்டு கிராமங்களான அக்கரை ஜெயங்கொண்ட பட்டினம், திட்டுக்காட்டூர், கீழ குண்டலபாடி கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. புயல் வெள்ள பாதுகாப்பு மையத்தில் தங்கும் இடம் மற்றும் உணவு குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆதித்யா செந்தில்குமார் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் தந்தி டிவிக்கு பேட்டி அளித்த அவர் பொது மக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருவதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்