கொள்ளிடம் ஆற்றில் கிடைத்த 4வது சடலம்.. பேரதிர்ச்சியில் சென்னை
தஞ்சை மாவட்டம், பூண்டி அருகே கொள்ளிடம் ஆற்றில் 5 பேர் மூழ்கிய நிலையில், 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. சென்னை சேத்துப்பட்டு நேரு பார்க் குடிசை மாற்று வாரியத்தைச் சேர்ந்த 5 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், கலைவேந்தன், கிஷோர், மனோகர் ஆகியோரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. இந்த நிலையில் 2வது நாளாக நடைபெற்ற தேடுதல் பணியின் போது பிராங்க்ளின் உடல் இன்று கண்டெடுக்கப்பட்டது. அவரது சகோதரரான ஆண்டோ உடலை தேடும் பணியில் உறவினர்கள் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story