எவ்வளவோ போராடியும் தடுக்க முடியவில்லை... கொள்ளிடத்தில் கேட்ட பலத்த சத்தம்
மேட்டூர் அணையில் இருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான கனஅடி நீர் திறந்து விடப்படுவதால், கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் வெளியேற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேப்பியர் பாலத்தில் மண் அரிப்பு ஏற்பட்டதன் காரணமாக அதன் அருகாமையில் இருந்த உயர் மின்னழுத்த கோபுரத்தின் கான்கிரீட் தூண்கள் சாய்ந்து விழும் நிலையில் இருந்ததால், மின்வாரிய ஊழியர்கள் கிரேன் உதவியுடன் கோபுரத்தை வலுப்படுத்தும் பணியை செய்தனர். ஆனால், தண்ணீரின் வேகம் தாங்காமல் நள்ளிரவில் உயர் மின் அழுத்த கோபுரம் பலத்த சத்தத்துடன் தண்ணீரில் விழுந்தது. பாலத்தில் முற்றிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டு பணிகள் மேற்கொண்டதன் காரணமாக, எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறவில்லை.
Next Story