மத்திய அரசையே பிடித்து ஆட்டிய ஒரு கொலை
வேலை நிறுத்தப் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக, பயிற்சி மருத்துவர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
மேற்குவங்கத்தில் பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பயிற்சி மருத்துவர்கள் கூட்டமைப்பினர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசினர். அப்போது, மருத்துவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்ப்பது, பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து எடுத்து கூறினர். அவர்களிடம் மருத்துவர்களுக்கு பாதுகாப்பான பணி சூழலை வழங்குவது உறுதி செய்யப்படும் என ஜே.பி.நட்டா உறுதி அளித்தார். இது தொடர்பாக குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் இதில், பயிற்சி மருத்துவர்கள் கூட்டமைப்பான FORDA அமைப்பை சேர்ந்தவர்கள் இடம் பெறுவார்கள் என்றும் கூறினார். இதையடுத்து, தங்களது கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதால், போராட்டத்தை முடித்துக் கொள்வதாக பயிற்சி மருத்துவர்கள் கூட்டமைப்பினர் அறிவித்தனர். அதே நேரத்தில் மற்ற மருத்துவர்கள் சங்கத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.