கனகராஜுக்கு 5 முறை வந்த ஃபாரீன் கால்.. கொடநாடு வழக்கில் திடீர் ட்விஸ்ட்..

x

சிபிசிஐடி போலீசார் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதன் அடிப்படையில், கொடநாடு வழக்கை நீதிபதி ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

கொடநாடு பங்களாவில், 2017ல் கொலை கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இதில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் வாகன விபத்தில் உயிரிழந்த நிலையில் சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு, தற்போது அனைவரும் ஜாமினில் உள்ளனர். இந்நிலையில் நீதிபதி லிங்கன் முன்னிலையில் கொடநாடு வழக்கு விசாரணைக்கு வந்தது. கனகராஜ் இறப்பதற்கு முன் ஏழு முறை அவருக்கு வெளிநாட்டில் இருந்து போன் வந்ததால், வெளிநாடு தொடர்பு குறித்து இன்டர்போல் போலீசாரின் உதவியை நாடியுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர். வெளிநாட்டு அழைப்புகள் குறித்து இன்டர்போல் போலீசாரின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால் சிபிசிஐடி போலீசார் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதன் அடிப்படையில் வழக்கை செப்டம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்