சுற்றுலா பயணிகளோடு திருவிழா,, வன அலுவலரின் செயலால் மாறிய நிலை.. கொடைக்கானலில் பரபரப்பு

x

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், மாவட்ட வன அலுவலர் வியாபாரிகளை அவதூறாக பேசி தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கொடைக்கானலின் முக்கிய சுற்றுலா தளமான, தூண் பாறையில், ஏராளமான வியாபாரிகள் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். அனைவரும், அருகே உள்ள சவேரியார் குருசடி தளத்தில் ஆண்டுதோறும் திருவிழா நடத்தி அன்னதானம் வழங்கி வருவது வழக்கம் என கூறப்படுகிறது.

இதேபோல், நடப்பாண்டிலும் வியாபாரிகள் திருவிழா கொண்டாடிய நிலையில், சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட வன அலுவலர் யோகேஸ் குமார், வனப்பகுதியில் எப்படி உணவு சமைக்கலாம் எனக் கூறி அன்னதானத்திற்காக வைத்திருந்த உணவுகளை எட்டி உதைத்தும் கீழே தள்ளியதாகவும், அருகிலிருந்து வியாபாரி சங்க செயலாளர் பிரபுவை கண்ணத்தில் அடித்து தாக்கியதாகவும் சொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக மாவட்ட வன அலுவலரை தொடர்பு கொண்டு கேட்டதற்கு எந்தவிதமான பதிலும் வரவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்