கொடைக்கானலில் அமைக்கப்பட்ட பூங்கா.. 360 டிகிரி செல்பி பாயிண்ட்டில் குவியும் மக்கள் | Thanthitv

x

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில், 5வது நாளாக நடைபெற்று வரும் 61வது மலர் கண்காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். மலர் கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், மயில், சேவல், வீடு, பொம்மை உள்ளிட்டவற்றை மலர்களால் வடிவமைத்துள்ளனர். குறிப்பாக, பூக்களால் அலங்கரிக்கப்பட்ட இடத்தில் அமைக்கப்பட்டுள்ள 360 டிகிரி செல்பி பாயிண்ட் சுற்றுலா பயணிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது. கடந்த 4 நாட்களில் 19 ஆயிரம் பேர் பூங்காவிற்கு வருகை தந்துள்ள நிலையில், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளதாக பூங்கா நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்