மலையில் இருந்து உருண்டு வந்த ராட்சத பாறை.. கொடைக்கானலில் பரபரப்பு
மலையில் இருந்து உருண்டு வந்த ராட்சத பாறை.. கொடைக்கானலில் பரபரப்பு
கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் அடுக்கம் கும்பக்கரை பெரியகுளம் சாலையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது . ராட்சத பாறைகள்
சாலையில் உருண்டு விழுந்தன. மரங்களும் முறிந்து
விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து பாறைகளை அகற்றி சாலையை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் 3 வது நாளாக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர், ராட்சத பாறைகளை துளையிடும் இயந்திரம் கொண்டு தகர்த்து பாறை குவியல்கள்
ஜேசிபி மூலம் அப்புறப்படுத்தப்படுகிறது, மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணல் மூடைகளை கொண்டு அடுக்கும் பணியில் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இச்சாலையில்
சனிக்கிழமை முதல் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல
அனுமதிக்கப்படும் என நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்துள்ளனர்.