வண்ண மலர்களால் செய்த விலங்குகள்.. கொடைக்கானலில் குவியும் மக்கள் - களைகட்டும் மலர் கண்காட்சி..
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 2வது நாள் மலர் கண்காட்சி களைகட்டியது... சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் குவிந்தனர்... கொரில்லா, டிராகன், பாண்டா கரடி, வரையாடு, கொக்கு, வாத்து, மீன் உள்ளிட்ட உருவங்கள் தத்ரூபமாக உருவாக்கப்பட்டிருந்தன... வீணை, ஓலைச்சுவடிகள் காட்சிப்படுத்தப்பட்டன... மலர்களால் உருவாக்கப்பட்ட வடிவங்களை மக்கள் வெகுவாக ரசித்து செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்... சுற்றுலா பயணிகளுக்காக பார்வை நேரம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது...
Next Story