தாலி கட்டிய அடுத்த நொடி.. தேடப்பட்டு வந்த 6-வது குற்றவாளி சரண் அடைந்த பின்னணி

x

கொடைக்கானல் அருகே இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், தேடப்பட்டு வந்த நபர், திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

கொடைக்கானல் மேல்மலை கிராமமான பழம்புத்தூரில் முத்தையா என்பவருக்கும், அருகில் உள்ள தோட்டத்தினருக்கும் இடையே நில பிரச்சனை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் முத்தையாவின் மூத்த மகன் ராமு மர்ம நபர்கள் தாக்கியதில் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து முத்தையா கொடுத்த புகாரின் பேரில், ராமுவை கொலை செய்ததாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். ஆறாவது நபரான சதீஷ் குமாருக்கு நேற்று பழனி பாப்பநாயக்கன்பட்டியில் திருமணம் நடந்த நிலையில், தன்னை போலீசார் தேடி வருவதை அறிந்த அவர், போலீசிடம் சரணடைந்தார். இதையடுத்து போலீசார், அவரை கொடைக்கானல் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்