கொடைக்கானலில் திடீர் புவி பிளவு - பேராபத்தா? சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள்
கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் ஒன்றான கிளாவரை கிராமத்தில் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், விவசாயம் செய்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதிக்கு உட்பட்ட செருப்பன் ஓடையில் இருந்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓடையில் வரும் குடிநீர் வாய்க்காலில் பிளவு ஏற்பட்டிருப்பதாகவும், உள்வாங்கில இருப்பதாகவும் 2 தினங்களுக்கு முன்பு வீடியோ வைரலானது. நில அதிர்வு ஏற்பட்டு இருக்கலாம் என கிராம மக்கள் அச்சமடைந்த நிலையில், நில அதிர்வு ஏற்படவில்லை என்று தெரிவித்த மாவட்ட நிர்வாகம், புவி பிளவு ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், புவியியல் துறை ஆய்வாளர் சுந்தர ராமன் உள்ளிட்ட அதிகாரிகள், எவ்வளவு தூரம் பிளவு ஏற்பட்டுள்ளது என்று அளவீடு செய்தனர். பிளவுக்கான காரணம் விரைவில் கண்டறியப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.