அமைச்சர் KN நேருவுடன் MLA மோதல்?- பரபரப்பை கிளப்பிய முகநூல் போஸ்ட் - உட்கட்சி பஞ்சாயத்தா?

x

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை தொடங்கி வைத்ததாக எம்எல்ஏ முகநூலில் பதிவிட்ட சம்பவம், சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

லால்குடி அருகே உள்ள இ‌.வெள்ளனூர் கிராமத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை, காலை 9.30 மணி அளவில் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சவுந்தரபாண்டியன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு இலவச பட்டா உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளையும் அவர் வழங்கி விட்டுச்சென்றார். அதைத் தொடர்ந்து, மதியம் 1 மணிக்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உள்ளிட்டோருடன் வந்த நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மீண்டும் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏ சவுந்தர பாண்டியன் கலந்து கொள்ளவில்லை. நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்களை முகநூலில் வெளியிட்டுள்ள சவுந்தர பாண்டியன், ஒரே நிகழ்ச்சி இரண்டு முறை நடைபெறுவது திருச்சி மாவட்டத்தின் நடைமுறை என்று குறிப்பிட்டுள்ளார். அவருடைய முகநூல் பதிவு, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்