கருணை அடிப்படையில் பணி வழங்க கோரிய வழக்கு... மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதி அதிரடி உத்தரவு
கருணை அடிப்படையில் பணி வழங்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என தொடரப்பட்ட வழக்கில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போளூர் பால்வார்த்து வென்றான் கிராமத்தை சேர்ந்த கோமதி என்பவருக்கு, கருணை அடிப்படையில் சத்துணவு அமைப்பாளராக பணி நியமனம் வழங்க, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த உத்தரவை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அமல்படுத்தவில்லை என தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், உரிய பதிலளிக்கும் படி மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்....
Next Story