கிளாம்பாக்கத்தில் நடக்கும் மாற்றம்... பயணிகளுக்கு குட் நியூஸ் | Kilambakkam Railway Station

x

கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணிகளை தெற்கு ரயில்வே தொடங்கியுள்ளது.

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் எதிரே புதிதாக கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்தது. இதற்காக சென்னை பெருநகர வளர்ச்சி குழும நிதியிலிருந்து சுமார் 20 கோடி ரூபாயை தமிழக அரசு தெற்கு ரயில்வேக்கு வழங்கியிருந்தது.‌ நீண்ட நாட்களாக கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வண்டலூர் - ஊரப்பாக்கம் இடையே மூன்று நடைமேடைகளுடன் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைகிறது. முதல் கட்டமாக ரயில் நிலைய நடைமேடை, மழைநீர் வடிகால் வசதி, ரயில் நிலைய சுற்றுச்சுவர் ஆகியவற்றை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி வரும் ஜனவரி 2025 ஆம் ஆண்டு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தையும், ரயில் நிலையத்தையும் இணைக்கும் வகையில் 79 கோடி ரூபாய் செலவில் உயர்மட்ட நடை மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்