கிளாம்பாக்கம் ரயில் நிலையம் எப்போது வரும்? - அதிகாரப்பூர்வ தகவல் வந்தது..!
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் கிளாம்பாக்கம் ரயில் நிறுத்தம் நடைமுறைக்கு வந்துவிடும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் கூறியுள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு 2 லட்சத்து 65 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில்,
ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
அதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் பொது மேலாளர் ஆர்.என்.சிங், தமிழகத்துக்கு கிடைக்கும் திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
அப்போது, 4- வது ரயில் முனையமாக வில்லிவாக்கத்தை பெரம்பூருக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என்று
தமிழகத்திற்கு புதிதாக 40 ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளது என்றும், தமிழக அரசு நிலத்தை கையகப்படுத்தி தந்தால் விரைந்து பணியை முடிக்க தெற்கு ரயில்வே தயாராக இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஒட்டி புதிதாக ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது என்றும், அதற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது என்றும் அவர் கூறினார்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் கிளாம்பாக்கம் ரயில் நிறுத்தம் நடைமுறைக்கு வந்து விடும் என்றும் அவர் கூறினார்.