GST சாலையில் புதிய தலைவலியான கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் வெள்ளம் - விழிபிதுங்கும் வாகன ஓட்டிகள்

x

சென்னை புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையால், கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலைய பகுதியில், மழை நீர் தேங்கியது. சுமார் ஒரு அடி உயரத்திற்கு மழை நீர் குளம் போல் தேங்கியது. இதனால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள், ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே அதிகாரிகள் ஜே.சி.பி இயந்திரம் மூலம், தேசிய நெடுஞ்சாலையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்