சிக்கிய புரோக்கர் `சதி' லீலாவதி.. அம்பலப்பட்ட மிகப்பெரிய நெட்வொர்க்

x

வேலூர் அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட குழந்தை, பெங்களூரில் மீட்கப்பட்ட நிலையில், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பேரணாம்பட்டு அடுத்த அரவட்லா பகுதியை சேர்ந்த கோவிந்தன் - சின்னு தம்பதிக்கு கடந்த 27-ம் தேதி வேலூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையை, அடையாளம் தெரியாத பெண் ஒருவர் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில், குழந்தையை கடத்திய வைஜெயந்தி, குழந்தையை கடத்தி வர கூறிய ஞானமணி, ஞானமணியின் கணவர் செல்லதுரை, பெங்களூருக்கு கார் மூலம் கடத்த உதவிய பிரவீன் செல்வன், குழந்தையை வாங்கி விற்பதில் தரகராக செயல்பட்ட லீலாவதி மற்றும் பணம் கொடுத்து குழந்தையை வாங்க முயன்ற ஐஸ்வர்யா மற்றும் அவரது கணவர் அஜய் குமார் என ஏழு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். குழந்தையையும் பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட குழந்தை வேலூர் அரசு மருத்துவமனையில் வைத்து, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்