கடவுள் தேசத்தை உலுக்கிய கடத்தல்..20மணி நேரத்திற்கு பிறகு நடந்த அதிசயம்..நிம்மதி பெருமூச்சு விட்ட..
கொல்லம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஒயூர் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி, பெண் உட்பட 4 பேர் கொண்ட கும்பலால் கடத்திச் செல்லப்பட்டார். இந்த சம்பவம் கேராளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர். 20 மணி நேரத்தைக் கடந்தும் சிறுமியை மீட்க முடியாத சூழலில், கொல்லம் ஆசிரமம் பகுதியில் உள்ள மைதானத்தில் அந்த கும்பல் சிறுமியை விட்டுச் சென்றது. அப்போது, அங்கு வந்த நபர் ஒருவர், சிறுமியிடம் விசாரித்தபோது, தான் கடத்தப்பட்டதையும், தனது தாயின் செல்போன் எண்ணையும் அந் சிறுமி தெரிவித்துள்ளார். பின்னர் தகவலின் பேரில் வந்த போலீசார், சிறுமியை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தில் சிறுமியை கடத்திய கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Next Story