திமுக கூட்டணியில் கார்கேவின் கணக்கு... TN காங்.க்கு டெல்லி கொடுத்த ஆர்டர்?
திமுக கூட்டணியில், தமிழ்நாட்டில் 10தொகுதியும் புதுச்சேரியில் ஒரு தொகுதி கேட்க காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி ராஜாஜி மார்க்கில் உள்ள மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை சந்தித்து பேசினார். அப்போது, தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ் குமார் மற்றும் தமிழக பொறுப்பாளர் அஜய் குமார் உடன் இருந்தனர். ஒரு மணி நேரம் நடைபெற்ற ஆலோசனையில், நாடாளுமன்றத் தேர்தல், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், வேட்பாளர் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும், தொகுதி பங்கீடு தொடர்பாகவும் பேசப்பட்டுள்ளது. அப்போது, திமுகவுடனான தொகுதி பங்கீடு தொடர்பான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையின்போது, தமிழ்நாட்டில் 10 தொகுதிகளும், புதுச்சேரியில் ஒரு தொகுதியும் என 11 தொகுதிகளை கேட்க வேண்டும் என்று கார்கே அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.