``நிலச்சரிவைத் தொடர்ந்து... அடுத்த அபாயம்..'' - அமைச்சர் வீணா ஜார்ஜ் எச்சரிக்கை வீடியோ

x

நிலச்சரிவைத் தொடர்ந்து தொற்று நோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர், உயிரிழந்தோரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் இடங்களுக்கு, காவல், சுகாதாரத்துறையினர் தவிர மற்ற பொதுமக்கள் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார். உயிரிழந்த விலங்குகளை உடனடியாக புதைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். மீட்பு குழுவினர் ஊடகவியலாளர்கள் நோய் தடுப்பு மருந்தான டாக்ஸி ப்ரொபைலாக்சிஸ் மாத்திரையை சுகாதாரத்துறையிடம் வாங்கி உட்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், அண்டை மாவட்டங்களான கோழிக்கோடு, மலப்புரம் மக்களும் கொதிக்க வைத்த குடிநீரையே குடிக்க வேண்டும் என்றும் வீணா ஜார்ஜ் அறிவுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்