கனமழை, பலத்த காற்று.. திடீரென இடிந்து விழுந்த வீடு - அதிர்ச்சியில் உரிமையாளர்
கேரள மாநிலம் கோழிக்கோடு மாம்புழக்காட் மீத்தல் காலனியில் கூலி வேலை செய்து வருபவர் ராமச்சந்திரன். காற்றுடன் கூடிய கனமழையால் ராமச்சந்திரனின் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. சம்பவம் நடந்த போது வீட்டில் யாரும் இல்லை. வேலைக்குச் சென்ற ராமச்சந்திரன் வீட்டுக்கு வந்து பார்த்த போது வீடு சேதமடைந்தது தெரிய வந்தது. மின் சாதனங்கள், உடைகள் எல்லாம் மழை மற்றும் இடிபாடுகளில் சிக்கி சேதமாகின... தங்க இடம், உடுத்த உடை கூட இல்லாமல் தவித்து வரும் கூலி தொழிலாளி ராமச்சந்திரன் உறவினர்களை நம்பி வாழும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார். இப்பகுதியில் மழையால் இடிந்த 4வது வீடு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
Next Story